'அஞ்சான்' படத்தினைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
லிங்குசாமி தயாரித்து இயக்கும் 'அஞ்சான்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சமந்தா, சூரி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைக்கும் இப்படத்தினை யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.
'அஞ்சான்' படத்தினைத் தொடர்ந்து சூர்யா, வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று சூர்யா - வெங்கட்பிரபு இணையும் படத்தின் பூஜை நடைபெற்றது. இயக்குநர்கள் பாலா, பாண்டிராஜ், நாசர் உள்ளிட்ட சில திரையுலக நட்சத்திரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
படத்தின் தலைப்பு, யாரெல்லாம் சூர்யாவுடன் நடிக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago