வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 2’-க்கு தயாரான சூரி - வீடியோ

By செய்திப்பிரிவு

‘குமரேசன் ரெடி’ என கூறி நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை பாகம் 1’. பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி, சேத்தன், தமிழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் மற்றும் க்ராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில், ‘ஒன்னோட நடந்தா’, ‘வழி நெடுக காட்டுமல்லி’ ஆகிய இரண்டு பாடல்களும் ஹிட்டடித்தன.

இந்நிலையில், தற்போது படத்தின் இரண்டாம் பாகத்தில் இயக்குநர் வெற்றிமாறன் கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பாக நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘விடுதலை’ படத்தின் கான்ஸ்டெபிள் கதாபாத்திரத்துக்கான சிகை அலங்காரத்துடன் அவர் ரெடியாகிறார். மேலும் அந்த ட்வீட்டில், “குமரேசன் ரெடி. விடுதலை பாகம் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE