ஒவ்வொரு படத்திலும் என்னை வடிவமைப்பது இயக்குநர்கள்தான் என்று நடிகர் சூர்யா பேசினார்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டுவிழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியுடன் சேர்த்து நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசிய தாவது:-
‘‘நான் நடிக்கும் படங்களில் வார்த்தை களை உச்சரிப்பது, பார்க்கும் ஸ்டைல், நடை என்று எல்லாவற்றையும் இயக்கு நர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள் கிறேன். இயக்குநர்கள் பாலா, கவுதம், இப்போது லிங்குசாமி என்று ஒவ்வொருவரும் என் கதாபாத்திரத்தை வடிவமைக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனத்திரையில் ஓட்டிப்பார்க்கும் ரோலில் சரியாக பொருத்தி நடிக்க வேண்டும் என்பதைத்தான் நானும் விரும்புவேன். அதில்தான் ஒரு நடிகரின் வெற்றி இருக்கிறது என்பது என் நம்பிக்கை. அந்த வகையில் ‘அஞ்சான்’ படத்தில் லிங்குசாமி சார் விரும்பிய நிறைய ஸ்டைல்கள் இருக்கும். அவை எல்லாமே புதிதாக இருக்கும். இப்படத்தில் நான் கிருஷ்ணா, ராஜூபாய் என்ற இரு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இரண்டு வேடங்களிலும் நிஜ சூர்யா கொஞ்சம்கூட வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதை நோக்கமாய் வைத்து செயல்படுத்தியிருக்கிறேன். இந்த படத்தை மிகவும் விரைவாக முடித்திருக்கி றோம். அதற்கு இப்படத்தின் ஒளிப்பதி வாளர் சந்தோஷ் சிவன் ஒரு முக்கிய காரணம். நாங்கள் ஒரு நாளைக்கு 2 காட்சிகள் என்று திட்டமிட்டு படப் பிடிப்புக்கு புறப்படுவோம். அங்கு 12.45 மணிக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிடும். அடுத்த நாள் எந்த காட்சிகளை படமாக்கவேண்டும் என்ற திட்டமிடுதலில் சந்தோஷ் சிவன் இறங்கிடுவார். ‘ஒளிப்பதிவாளர் ஜீவாவுடன் வேலை பார்க்கும் போது இருக்கும் உணர்வை சந்தோஷ் சிவன் உண்டு பண்ணுகிறார்’ என்று லிங்குசாமி அடிக்கடி சொல்லுவார்.
‘அஞ்சான்’ படத்தை தொடங்குவதற்கு முன் லிங்குசாமி என்னிடம் மூன்று கதை களைக் கூறினார். அந்த மூன்று ஸ்கிரிப்டு களில் இருந்து எனக்கு எது சரிவரும் என்று யோசித்து இந்தக் கதையை தேர்ந்தெடுத்தேன். அவர் சொன்ன மற்ற கதைகளில் ஒன்றான ‘எண்ணி ஏழு நாள்’ கதையில்தான் என் தம்பி கார்த்தி நடிக்கிறார். எங்கள் ஒட்டுமொத்த குழு வுமே ஒரு சுற்றுலா போய்விட்டு வருவது போன்ற ஒரு அனுபவத்தை ‘அஞ்சான்’ எங்களுக்கு ஏற்படுத்தியது. ஜூலை 23ம் தேதி என் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் ரத்த தானம் செய்வது போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபடவுள்ளது ரொம்பவே மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நீங்கள் கொண்ட அன்புக்கு மிக்க நன்றி. தயவு செய்து யாரும் திருட்டு டிவிடியில் படம் பார்க்க வேண்டாம்.’’
இவ்வாறு சூர்யா பேசினார்.
முதன்முதலாக ‘அஞ்சான்’ படத்தில் சூர்யா பாடிய ஒரு பாடல் குறித்து இந்நிகழ்ச்சியில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “யுவன் சங்கர் ராஜா இசையில் ஆண்ட்ரியாவோடு சேர்ந்து இந்த பாடலை சூர்யா பாடியிருக்கிறார். ஒரு விளம்பரப் படத்தில் அவர் இரண்டு வரி பாடியதை வைத்துதான் எங்களுக்கு இந்த யோசனையே வந்தது. அதேபோல கவுதம் மேனன் படங்களில் எல்லாம் அவரோட உச்சரிப்பு ரொம்பவே ரசிக்கும்படி இருக் கும். நிச்சயம் நன்றாக அமையும் என்ற நம்பிக்கையுடன் பாடவைத்தோம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், அபிராமி ராம நாதன், இயக்குநர்கள் பார்த்திபன், சசி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாடலாசியர்கள் நா.முத்துக் குமார், கபிலன், விவேகா, மதன் கார்க்கி உள்ளிட்ட திரை உலகினர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago