ரஜினியின் ‘ஜெயிலர்’ பட 2-வது சிங்கிள் ஜூலை 17-ல் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘Hukum’ பாடல் வரும் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Kaavaalaa’ பாடல் கடந்த ஜூலை 6-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார். அருண்ராஜா காமாராஜா பாடலை எழுதியிருந்தார்.ஷில்பா ராவ், அனிருத் இணைந்து பாடியிருந்தனர். இந்தப் பாடல் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘Hukum’ பாடல் ஜூலை 17-ம் தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரோமோ வீடியோவில் ‘ஹூகூம் டைகர்கா ஹூகூம்’ என ரஜினியின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது. இதற்கு அர்த்தம், ‘இது டைகரின் கட்டளை’ என்பதையும் இதற்கான அறிவிப்பு ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE