ஆங்கிலோ இந்திய பெண்ணாக யோகிபாபு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் யோகிபாபு தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார். ‘அயலான்’, ‘ஜெயிலர்’, ‘ஜவான்’, ‘கங்குவா’, ‘எல்ஜிஎம்’, ‘பூமர் அங்கிள்’ உட்பட பல படங்களில் இப்போது நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் புதிய படம் ஒன்றில் ஆங்கிலோ இந்தியபெண்ணாக நடிக்கிறார். செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய லதா இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘மிஸ்.மேகி’. டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார். இதில் யோகிபாபு ஆங்கிலோ - இந்திய பெண்ணாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE