உதயநிதி, தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய படம், 'கண்ணே கலைமானே'. 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்தது. மனதைத் தொடும் வகையில் மனிதம் பேசியதற்காகப் பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படம் சமீபத்தில் நடந்த இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் 3 விருதுகளை பெற்றுள்ளது.
சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும் சிறந்த துணை நடிகை விருது வடிவக்கரசிக்கும் கிடைத்துள்ளது. இதுபற்றி சீனு ராமசாமி கூறும்போது, “இந்தப் படம் வெளியான பின் கொல்கத்தா பட விழாவில் 2 விருதுகளைப் பெற்றது. கரோனா காரணமாக வேறு விழாக்களுக்கு அனுப்பவில்லை. இப்போது படத்தை எடிட் செய்து இந்தோ - பிரெஞ்சு பன்னாட்டு பட விழாவுக்கு அனுப்பினோம். அதில் 3 விருதுகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago