உழைக்கும் வர்க்கத்துக்காக குரல் கொடுத்துள்ள படம் ‘அநீதி’: இயக்குநர் ஷங்கர் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் எம். கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், வசந்த பாலன் தயாரித்துள்ள படம், ‘அநீதி’. வசந்தபாலன் இயக்கியுள்ள இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், ‘நாடோடிகள்’ பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் மூலம் வழங்குகிறார். ஜூலை 21-ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது:

இந்த ‘அநீதி’ படம் யதார்த்தமாகவும் த்ரில்லராகவும் புது கலவையாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள். அவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று உழைக்கும் வர்க்கத்துக்காக ஓங்கி குரல் கொடுத்திருக்கிறார் வசந்தபாலன். நமக்கு கீழே வேலை செய்பவர்களை எப்படி நடத்துகிறோம் என்று யோசிக்க வைக்கும் படம் இது. அந்த வகையில் வசந்தபாலன் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவருடைய அருமையான எழுத்தில், சிறப்பான இயக்கத்தில் நம்மைக் கண்கலங்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், கோபப்பட வைக்கிறார். இப்படி படம் நெடுக சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் படத்தை கவிதைத்தனமாக முடித்திருக்கிறார்.

அர்ஜுன் தாஸ், தனது தனித்தன்மையான நடிப்பால் கண்கலங்க மட்டுமல்ல, கதிகலங்கவும் வைத்திருக்கிறார். துஷாரா விஜயனும் சிறப்பாக நடித்துள்ளார். ஒவ்வொரு தொழிலாளியும் பாரக்க வேண்டிய படம். அதே நேரம் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் முதலாளிகளும் பார்க்க வேண்டிய படம் இது. இவ்வாறு ஷங்கர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்