சென்னை: நடிகராகவும் இயக்குநராகவும் சசிகுமார் அறிமுகமான படம், ‘சுப்ரமணியபுரம்’. அவரே தயாரிக்கவும் செய்தார். கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி, நேற்றோடு 15 வருடமானது.
இதுபற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள சசிகுமார், “சுப்ரமணியபுரம் வெளியாகி 15 வருடங்கள் கடந்துள்ளன. நேற்று நடந்தது போல் இருக்கிறது. இதன் நினைவுகள் பசுமையாக அப்படியே இருக்கின்றன. இந்தப் படத்தை நீங்கள் கொண்டாடினீர்கள். இந்த அருமையான நாளில், நான் மீண்டும் இயக்குநராக களம் இறங்க இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். சுப்ரமணியபுரம் படத்தை அடுத்து ஈசன் படத்தை இயக்கிய சசிகுமார், அடுத்து ‘குற்றப்பரம்பரை’ நாவலை வெப் தொடராக இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago