சென்னை: யூடியூபர் டிடிஎப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎப் வாசன் எனும் இளைஞருக்கு பல லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி, தன்னைப் பின்தொடர்வோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இந்த மீட்டப்பில் ஆயிரக்கணக்கனோர் திரண்டதால் போலீஸ் எச்சரிக்கும் அளவுக்கு அது சென்றது. அவரது அழைப்பு ஏற்று வந்த ஆயிரக்கணக்கானோரில் பலரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். இவரது இந்த ‘மாஸ்’ சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களாகவும் எழுந்தன.
இந்நிலையில், அவரது பிறந்த நாளான இன்றைய தினம் அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் டிடிஎப் வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல உள்ளது. போஸ்டரில் அய்யனார் சிலையும் பின்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
அதன் கீழ் ‘மணிக்கு 299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது. செல்அம் இயக்குகிறார்.
» அதிக பென்ஷன் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 11 வரை நீட்டிப்பு
» இந்தியாவால் இலங்கைக்கு ஐஎம்எப் நிதியுதவி கிடைத்தது: இந்தியாவுக்கான இலங்கை தூதர் தகவல்
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago