“கமல்ஹாசனுக்கு இதயத்தில் இருந்து நன்றியை உரித்தாக்குகிறேன்” - இயக்குநர் மாரி செல்வராஜ்

By செய்திப்பிரிவு

திரையரங்குகளில் நாளை (ஜூன்29) ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ‘மாமன்னன்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி கமல்ஹாசனுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ‘மாமன்னன்’ படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் நாளை (ஜூன்29) திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவர் மகன் விவகாரம்: முன்னதாக, ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இதன் இயக்குநர் மாரி செல்வராஜ், ‘தேவர்மகன்’ திரைப்படம் தனக்குள் மனபிறழ்வை உண்டாக்கியது என்றார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் விளக்கம் அளித்திருந்தார்.

அதில் அவர், “நான் ‘மாமன்னன்’ படத்தின் கதையை எழுதுவதற்கு காரணம், ‘தேவர் மகன்’ படத்தில் வடிவேலு நடித்த இசக்கி கேரக்டர்தான். எனக்கும் கமல் சாருக்கும் இடையே நடந்த உரையாடல், என் ‘எமோஷன்’. ‘மாமன்னன்’ படம் பற்றி பேசும்போது இசக்கி கேரக்டர் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அதனால் அந்த மேடையில் அவர் முன் அப்படி பேசினேன். என் நியாயத்தை கமல் புரிந்து கொண்டார்.

சினிமா பற்றி முழு அறிவு கொண்ட ஒருவரிடம் நான் என் கேள்வியை வைத்திருக்கிறேன். கமல் சார் பேசும்போது, ‘இது மாரியின் அரசியல் மட்டுமல்ல, நம் அரசியல்’ என்று சொன்னார். இந்த வார்த்தைக்காகத்தான் ஏங்கி உட்கார்ந்திருந்தேன். கமல் சாருக்கும் எனக்குமான உரையாடல் ‘மாமன்னன்’ ரிலீஸுக்கு பிறகு முழுமையடைந்துவிடும் என்று நம்புகிறேன்” மாரி செல்வராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்