ஜூலை 21-ல் வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ‘கொலை’ 

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலை’ திரைப்படம் வரும் ஜூலை 21ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்துள்ள படம் ’கொலை’. இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, பாலாஜி கே.குமார் இயக்கியுள்ளார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் சம்கித் போஹ்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆண்டே வெளியாகி கவனம் ஈர்த்தது. ஹாலிவுட் தரத்திலான மேக்கிங், இசை மற்றும் ஒளிப்பதிவு சமூக வலைதளங்களில் பேசப்பட்டன. இப்படம் மர்டர் மிஸ்டரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு இன்று (ஜூன் 28) அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இப்படம் வரும் ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

25 mins ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்