புகைப்பிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு: ’லியோ’ பாடலில் மாற்றம் செய்த படக்குழு

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் நடிக்கும் ’லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள ’நான் ரெடி’ பாடலில் புகைபிடிப்பது போன்ற காட்சி எதிர்ப்பு கிளம்பியதையடுத்து படக்குழு அப்பாடலில் ஒரு சிறிய மாற்றம் செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன. வரும் அக்டோபரில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘லியோ’ படத்தின் முதல் பாடலான `நா ரெடி' பாடல், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்மையில் வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்பாடலில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளதால், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம், இந்தப் பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளித்தார். அதில், ‘போதைப் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும்,

இந்த சூழலில் ’நான் ரெடி’ பாடலில் ‘லியோ’ படக்குழு ஒரு சிறிய மாற்றத்தை செய்துள்ளது. யூடியூபில் இருக்கும் இப்பாடலில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் இடங்களில் ‘புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும். உயிரைக் கொல்லும்’ என்ற வாசகம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE