‘சூர்யவம்சம்’ 26 ஆண்டுகள் | “நன்றி... விரைவில் இரண்டாம் பாகம்” - சரத்குமார் பகிர்வு

By செய்திப்பிரிவு

“சூர்யவம்சம் படத்தை வெற்றிபெற வைத்து ஆதரவளித்தவர்களுக்கு நன்றி; விரைவில் சூர்யவம்சம் இரண்டாம் பாகம்” என ‘சூர்யவம்சம்’ படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்ததையொட்டி நடிகர் சரத்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1997-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘சூர்யவம்சம்’. இந்தப் படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. தேவயானி, ராதிகா, மணிவண்ணன், ஆனந்த்ராஜ், ப்ரியா ராமன், சத்யபிரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், “கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்பு வாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி! விரைவில் சூர்யவம்சம் - 2” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

21 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்