“சாதிப் பெயர் கொண்ட பாடல்களை ஒலிபரப்ப தடை விதிப்பீர்” - முதல்வருக்கு சீனு ராமசாமி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

“தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்களை பொது இடங்களில் ஒலிபரப்ப தடை விதிக்க வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள் சினிமா, தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை தடை விதித்தல் செய்திட முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அண்மையில் நடந்த ‘மாமன்னன்’ இசை வெளியிட்டு விழாவில் ‘தேவர் மகன்’ குறித்த மாரிசெல்வராஜின் பேச்சுக்குப் பிறகு இணையத்தில் சாதிய பாடல்கள் குறித்து விவாதம் எழுந்தது. இந்த விவாதங்களின் ஒருபகுதியாக சீனுராமசாமியின் இந்த கோரிக்கை கவனம் பெற்றுள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படதைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், காயத்ரி நடிக்கும் ‘இடி முழக்கம்’ படத்தை இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்