சென்னை: ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘பார்க்கிங்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், இந்துஜா நாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை இயக்கியுள்ள ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறும்போது, “இது திரில்லர் ட்ராமா கதையை கொண்ட படம். கார் வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் ‘பார்க்கிங்’ பிரச்சினையைச் சந்தித்திருப்பார்கள். அதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. பார்ப்பதற்குச் சிறு மோதலாகத் தெரியும் பார்க்கிங் விவகாரம் என்ன மாதிரியான சிக்கலுக்கு கொண்டு செல்கிறது என்று கதைப் போகும். ஹரிஷ் கல்யாண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவராக நடிக்கிறார். இந்துஜா, இதுவரை நடித்திராத பாத்திரத்தில் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். சென்னையில் நடக்கும் கதை இது. கார் வைத்திருக்கும் அனைவரும் தங்களை கதையோடு பொருத்திக் கொள்ள முடியும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago