விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி’ வெளியாகி, அவரது ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சேவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளான இன்று லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டுள்ளது.இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.
பாடல் வீடியோவில் உற்சாகமாக நடனம் ஆடும் விஜய்யை சுற்றி இளைஞர்களும் நடனமாடும் காட்சிகள் சில இடம்பெற்றுள்ளன. தற்போது விஜய்யின் ’நான் ரெடி’ பாடலை அவரது ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
» ‘அமுல்’ சிறுமியை உருவாக்கிய ‘விளம்பரத் துறை குரு’ சில்வெஸ்டர் டா குன்ஹா மறைவு
» பாட்னா கூட்டம் | எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையில் தீவிரமும் உண்மையும் இல்லை: மாயாவதி விமர்சனம்
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago