சர்ச்சையைத் தொடர்ந்து எகிறும் வசூல்: மெர்சல் படக்குழு மகிழ்ச்சி

By ஸ்கிரீனன்

ஜிஎஸ்டி வரி வசனங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, 'மெர்சல்' படத்தின் வசூல் அதிகரித்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

'மெர்சல்' படத்தின் வசூல் இரண்டாவது நாளில் கொஞ்சம் குறைந்திருக்கிறது. அன்று மாலை முதலே ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக பாஜக கட்சியினர் கடும் ஆட்சேபம் தெரிவித்து பேட்டியளிக்கத் தொடங்கினார்கள்.மேலும், தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் ட்வீட் செய்யவும் செய்தார்கள்.

இந்த சர்ச்சை தொடங்கியதிலிருந்தே வசனங்கள் அல்லது காட்சிகள் நீக்கப்பட்டு விடுமோ என்று மக்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது. இதனால் உலகளவில் 3 நாட்களில் சுமார் 100 கோடி வசூலைக் கடந்திருக்கிறது 'மெர்சல்'

பாலிவுட் திரையுலகின் வியாபார நிபுணர் தரண் ஆதர்ஷ், "தமிழ் திரைப்படமான 'மெர்சல்', சமீபத்தில் வெளியான 2 இந்தி படங்களைத் தாண்டி பல வெளிநாடுகளில் வசூலை நிகழ்த்தி வருகிறது" என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்தளவுக்கு வசூல் அதிகரித்திருப்பதற்கு, சமீபத்தில் ஜிஎஸ்டி வரி தொடர்பான சர்ச்சையே காரணம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். மேலும், பெரும் முதலீடு செய்திருப்பதால் இந்த வசூலால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஜிஎஸ்டி வசனம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'கீ' படக்குழுவினரும் தங்களுடைய படத்திலிருந்து ஜிஎஸ்டி வசனம் தொடர்பான டீஸரை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்