சென்னை: கோபுரம் ஸ்டுடியோஸ் கே.பாபு ரெட்டி, ஜி.சதீஷ்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லில்லி’. பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி ரெட்டி, ராஜீவ் பிள்ளை, சிவ கிருஷ்ண காரு, செந்தில் பொன்னுசாமி உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஆண்டோ பிரான்சிஸ் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.
படம் பற்றி இதன் இயக்குநர் சிவம் கூறும்போது, “ இது முழுக்க குழந்தைகளுக்கான படம். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள பான் இந்தியா படம் இதுவாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் பெரியவர்களுக்கான படமும் தான். நட்பு, விட்டுக் கொடுத்தல் உள்ளிட்ட விஷயங்களை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறோம். கிளைமாக்ஸ் கண்கலங்க வைக்கும். படத்தில் டைனோசரையும் பயன்படுத்தி இருக்கிறோம். அதுவும் ஒரு கதாபாத்திரமாகவே வரும். படம் இம்மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago