‘தண்டட்டி’க்கும் ‘அண்டாவ காணோம்’ படத்துக்கும் தொடர்பில்லை!- இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் 'தண்டட்டி'. வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ளார் . ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, உட்பட பலர் நடித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படம் 23-ம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி பசுபதி கூறும்போது, “‘சார்பட்டா பரம்பரை' படத்துக்குப் பிறகு வித்தியாசமான கதைகள் வந்தால் நடிக்கலாம் என இருந்தேன். அப்போதுதான் ராம் சங்கையா இந்தக் கதையைச் சொன்னார். எனக்கு பிடித்தது. இதை நல்ல படம் என்று தைரியமாகச் சொல்வேன். இறப்பு வீட்டில் ‘தண்டட்டி’ காணாமல் போய்விடுகிறது. அதைக் கண்டுபிடிக்கச் செல்லும் கான்ஸ்டபிளாக நடித்துள்ளேன். கிராமத்துப் பின்னணியில் உருவாகி இருக்கும் படம். எனது கதாபாத்திரம் திருப்திகரமாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து விட்டேன். சமீபகாலமாக இதுபோன்ற கதைகள் உள்ள படங்கள் தான் வெற்றிபெறுகின்றன” என்றார்.

இயக்குநர் ராம் சங்கையா கூறும்போது, “தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், ‘அண்டாவ காணோம்’ படத்தின் கதையும் இதுவும் ஒரே மாதிரி இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். நாங்கள் அவருக்கு படத்தைத் திரையிட்டுக் காண்பித்தோம். பார்த்துவிட்டு என் படம் வேறு, உங்கள் படம் வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றார். 2 மணிநேரம் ஓடும் இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்