இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #VIJAYHonorsStudents

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் கல்வி விருது நிகழ்வை முன்னிட்டு அது தொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டர் சமூக வலைதளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வு சென்னை - நீலாங்கரை பகுதியில் இன்று (ஜூன் 17) நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் என பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று காலை முதலே ட்விட்டர் சமூக வலைதளத்தில் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் குறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வந்தன. இந்த நிலையில் காலை நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் #VIJAYHonorsStudents என்ற ஹேஷ்டேக் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்களுடன் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. அத்துடன் #ActorVijay, #VijayMakkalIyakkam, #ThalapathyVijay உள்ளிட்ட ஹேஷ்டேகுகளும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

நெட்டிசன்கள் பலரும் இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து விஜய்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE