தமிழக அரசின் புதிய கேளிக்கை வரிவிதிப்புக்கு திரைத்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்திய தயாரிப்பாளர் சங்கக் கூட்டமைப்பு தமிழ்த் திரையுலகினர் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சித்தார்த் ராய் கபூர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலுக்கு எழுதிய ஆதரவு கடிதத்தில், புதிய கேளிக்கை வரிக்கு எதிரான போராட்டத்துக்கு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கும் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்திரையுலகம் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு முழு ஆதரவளிக்கிறோம். நாட்டின் இரட்டை வரிவிதிப்புக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். இரு அமைப்புகளும் இணைந்து செயல்பட்டால் நல்லது.
இந்தியத் தயாரிப்பாளர் சங்க சி.இ.ஓ. குல்மீத் மக்கார் திரைப்படத் துறை சந்தித்து வரும் சவால்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள மகிழ்ச்சியுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார், என்று விஷாலுக்கு எழுதிய கடிதத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனது ஆதரவை உறுதி செய்த குல்மீத் மக்கார், தன் கடிதத்தில், “தமிழ்நாட்டில் இரட்டை வரி விதிப்பை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்துக்கு இந்திய தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு அளிக்கிறது. ஜிஎஸ்டிக்கு மேல் வரி விதிப்பு கூடாது மற்றும் தமிழ் அல்லது தமிழ் அல்லாத படங்கள் என்பதில் பல்வேறு மொழிப்படங்களுக்கு வேற்பட்ட வரி விதிப்பு முறைகள் இருக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டு ஆதரவளிக்கிறோம்.
ஒருநாடு ஒருவரி என்ற ஜிஎஸ்டி கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எனவே ஜிஎஸ்டிக்கு மேல் கூடுதல் வரி விதிப்பு நடைபெற்றால் திரைப்படத்துறையினர் திரைப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொண்டு இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டமைப்பு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இது குறித்து எடுத்துள்ள முடிவுகளை ஆதரித்து ஆதரவளிக்க உறுதி கூறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் சித்தார்த் ராய் கபூர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக அரசு ஜிஎஸ்டி வரிக்கு மேல் கூடுதல் கேளிக்கை வரியை விதிக்கும் முடிவை எடுத்திருப்பது பிற்போக்குத் தனமானது, எனவே தமிழக அரசு உடனடியாக இந்தக் கேளிக்கை வரி விதிப்பை நீக்க வேண்டும் என்று இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டமைப்பு திரைப்பட தொழிற்துறையின் நலன்களைக் கருதி வலியுறுத்துகிறது” என்று முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago