சீரியஸ் வடிவேலு, வில்லன் ஃபஹத், சைலன்ட் உதயநிதி - மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசிலுடன் இப்படத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதில் நடிகர் வடிவேலுவின் லுக் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் கடந்த 19-ம் தேதி வெளியானது. யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியிருந்த இந்தப் பாடல் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் நீக்கமற நிறைந்துள்ளது. மேலும் படத்தின் அனைத்து பாடல்களும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - 3 நிமிடங்கள் ஓடும் ட்ரெய்லர் வடிவேலின் பின்னணி குரலுடன் தொடங்குகிறது. வலிமிகுந்த குரலில் அவர் பேசும் வசனங்கள் ஈர்க்கின்றன. கொடூர வில்லனாக பஹத் பாசில், ஆக்ரோஷத்துடன் பேசும் வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகின்றன. ட்ரெய்லரின் இடையிடையே ஓடும் நாய்கள், இறுதியில் உதயநிதி கையிலிருக்கும் பன்றிக்குட்டி, புத்தர் சிலை, அழுத்தமான வசனங்கள் மாரி செல்வராஜ் டச்.

சீரியஸாக வெள்ளை வேட்டி சட்டையில் வடிவேலுவின் கதாபாத்திர வார்ப்பு அட்டகாசம். உதயநிதி ஸ்டாலின் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு ‘ஊருக்குள்ள வந்தா கொன்றுவீங்களாடா’ என பேசும் வசனம், லாலின் அரசியல்வாதி அவதாரம், கீர்த்தி சுரேஷின் கோபம், இறுதியில் உதயநிதி, வடிவேலுவின் சிட்டிங் என மொத்த ட்ரெய்லரும் ரத்தமும் சதையுமாக வெட்டப்பட்டுள்ளது. படம் வரும் ஜூன் 29-ம் தேதி திரைக்கு வருகிறது.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்