‘சாமானியன்’ படத்தில் நடித்து வரும் ராமராஜன் அடுத்தாக இளையராஜா இசையமைக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளன.
1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் ராமராஜன், நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு 'மேதை' படத்தில் நடித்தார். அதையடுத்து 10 வருடங்களுக்குப் பிறகு தற்போது ‘சாமானியன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளன. இந்தப் படத்தை ‘சாமானியன்’ படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் இயக்குகிறார். படத்தின் இளையராஜா இசையமைக்கிறார்.
» வெள்ளிக்கிழமை வெளியாகும் 'மாமன்னன்' ட்ரெய்லர்: படக்குழு அறிவிப்பு
» ஆதரவற்ற நிலையில் இறந்த துணை நடிகர் - முன்னின்று இறுதிச் சடங்குகளை செய்த டி.இமான்
படம் குறித்து இயக்குநர் கார்த்திக் குமார் கூறும்போது, “நான் எழுதியிருந்த சாமானியன் கதை ராமராஜனுக்கு மிகவும் பிடித்துப் போனது. முழுக்க முழுக்க கதையை நம்பியே அவர் சாமானியன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தப் படத்தை முடித்ததும் என்னை அழைத்து, அடுத்ததாக இன்னொரு படம் பண்ண தயாராகி விட்டேன்.
உங்களிடம் ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டார். அப்போது நான் சொன்ன ஒரு கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதனால் இந்த படத்தை நீங்களே இயக்கினால் நன்றாக இருக்கும் என என்னை உற்சாகப்படுத்தினார் ராமராஜன். அதனால் இந்தப் படத்தின் மூலம் நான் இயக்குநராகவும் மாறி உள்ளேன். சமூக பிரச்சினையை மையப்படுத்தியே இந்த படம் இருக்கும்.
இந்தப் படத்தில் நடிகர் ராமராஜன் ஒரு சாதாரண வழக்கறிஞர் ஆக நடிக்கிறார்.ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முழு வீச்சில் துவங்க இருக்கிறோம். கதாநாயகியாக நடிக்க மீனா போன்ற முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
44 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago