தனுஷ் இயக்கும் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் அந்தப் படத்தின் பெயர் குறிப்பிடாமல் தான் அதில் நடிக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டும் எனத் தெரிகிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. தனுஷின் 50-ஆவது படமாக உருவாகும் இப்படத்தை அவரே இயக்குவதாக தகவல் வெளியானது. படத்தில் தனுஷின் சகோதரராக சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாகவும், எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால் நடிப்பார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தத் தகவலை விஷ்ணுவிஷால் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “துரதிஷ்டவசமாக நான் அந்தப் படத்தில் நடிக்கிறேன் என கூறி பரவி வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. எனக்கு அந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும், என்னுடைய மற்ற படங்கள் காரணமாக அதில் இடம்பெற முடியவில்லை. படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என படத்தின் பெயர் குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.
» ரூ.2,000-க்கு விற்கப்படும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ டிக்கெட்டுகள்
» ‘கீதா கோவிந்தம்’ இயக்குநருடன் மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
13 mins ago
சினிமா
24 mins ago
சினிமா
31 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago