சில மாதங்களுக்கு முன்பு கேளிக்கை வரி தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழக அரசிடம் திரையரங்குகளுக்கான டிக்கெட் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால், இது தொடர்பாக அரசு எந்ததொரு அறிவிப்புமே வெளியிடாமல் ரூ.120+ ஜிஎஸ்டி என டிக்கெட் விலை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். விரைவில் அரசாணை வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக திரையுலகினர் தெரிவித்தார்கள்.
சில நாட்களுக்கு முன்பாக ஜிஎஸ்டி வரி போக, கேளிக்கை வரி 10 சதவீதம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததால் திரையுலகினர் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இதனால் புதிய படங்கள் எதுவுமே வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார். இதனால் பல்வேறு படங்கள் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன.
இந்நிலையில், திரையரங்குகளுக்கான டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 25% வரை டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ.150, குறைந்தபட்சமாக ரூ.15 என நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு. இதன்படி ரூ.150 (தமிழக அரசின் கேளிக்கை வரி சேர்த்து)+ ஜிஎஸ்டி (ரூ.42)=ரூ.192 சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு அக்டோபர் 9-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
கடும் பாதிப்படையும் சிறு திரையரங்குகள்
தமிழகத்தில் மொத்தம் 1000 திரையரங்குகள் என வைத்துக் கொண்டால், அதில் சுமார் 800 திரையரங்குகள் வரை சிங்கிள் ஸ்கிரீன்ஸ் என சொல்லப்படும் திரையரங்குகள்தான். இவற்றுக்கு தமிழக அரசு 25% வரை டிக்கெட் உயர்த்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதன்படி மாநகராட்சி, நகராட்சி என அனைத்துக்குமே ஒவ்வொரு விலையை நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.50 வரையும் குறைந்தபட்சமாக ரூ.4 வரையும் விற்றுக் கொள்ளாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. ஏனென்றால் தற்போது அனைத்து திரையரங்குகளில் ரூ.80 வரை டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி
டிக்கெட் விலை நிர்ணயம் தொடர்பாக தயாரிப்பாளர்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இது தொடர்பாக பேசிய முன்னணி தயாரிப்பாளர், "இந்த விலை உயர்வு சென்னையில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனால், மற்ற ஊர்களில் இருக்கும் திரையரங்குகளில் நிலை படுமோசமாகிவிடும். தமிழகத்தைப் பொறுத்தவரை சிங்கிள் ஸ்கிரீன் எனப்படும் திரையரங்குகளே அதிகம். மேலும், டிக்கெட் விலை போக இணைய வழியாக டிக்கெட் ஒப்பந்தம் செய்யும் போது ரூ.192+ரூ.30=ரூ.222 வாங்குவார்கள். இதையும் குறைக்க வழிவகை செய்யவேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை அனைத்துமே இப்போது பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆனால், திரையரங்குகள் டிக்கெட் விலையை மட்டும் ஏற்ற ஏன் அரசு இவ்வளவு தயக்கம் காட்டுகிறது என தெரியவில்லை" என்றார் கோபமாக.
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள டிக்கெட் விலை அரசாணையில், எத்தனை காட்சிகள் திரையிடலாம் உள்ளிட்ட எந்ததொரு குறிப்புமே இடம்பெறவில்லை. இதனால், திரையரங்க உரிமையாளர்கள் இந்த அரசாணை தொடர்பாக குழப்பமான சூழலே உருவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago