அக்.18-ல் மெர்சல் வெளியீடு: தயாரிப்பு நிறுவனம் உறுதி

By ஸ்கிரீனன்

புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை மீறி 'மெர்சல்' படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

தமிழக அரசு 10% கேளிக்கை வரி விதித்திருப்பதை கண்டித்து, புதிய படங்கள் வெளியீடு இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. மேலும், திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை 25% உயர்த்திருப்பதால் மேலும் சர்ச்சையாகியுள்ளது. இவ்விரண்டு பிரச்சினைகள் குறித்து தமிழக அரசுடன் திரையுலக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

பல புதிய படங்களை, இப்பிரச்சினையால் வெளியிடாமல் இருக்கிறார்கள். ஆனால், அக்டோபர் 18-ம் தேதி 'மெர்சல்' வெளியீடு உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

இது குறித்து படக்குழுவினர் சார்பில் கேட்டபோது, "கண்டிப்பாக அக்டோபர் 18-ம் தேதி வெளியீடு என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஏனென்றால் படத்தின் பொருட்செலவு அதிகம். இதே போன்றதொரு பண்டிகை விடுமுறை, இனிமேல் கிடைக்காது. எங்களுடைய வெளியீட்டிற்குள் கண்டிப்பாக கேளிக்கை வரிப் பிரச்சினை முடிவுக்கு வரும் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்கள்.

ஆனால் ஒரு படம் வெளியானாலும், மற்றவர்கள் 'மெர்சல்' மட்டும் வெளியாகியுள்ளதே என்று கேட்கும் சூழல் உருவாகும். மேலும், அப்படம் வெளியானால் கேளிக்கை வரியை நாம் ஏற்றுக் கொள்வது போல் ஆகிவிடும் என்று தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தையில் இறங்க தீர்மானித்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்