கந்துவட்டி கொடுமையால் தீக்குளிப்பு: அரசு அதிகாரிகளுக்கு ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்

By ஸ்கிரீனன்

கந்துவட்டி கொடுமையால் நடந்த தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவரது மனைவி (25), மகள்கள் மதி (5) அட்சயா (1). இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (திங்கள்கிழமை) தீக்குளித்தனர். கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.

அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி காருண்யா, அட்சயா பரணிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூகவலைதளத்தில் பலரும் தங்களுடைய பேரதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

ஆட்சியர் அலுவலகம் முன்பு இறந்த குடும்பத்தை கேட்டு மிகுந்த மன அழுத்தமும், வேதனையும் அடைந்தேன். அந்த அலுவலகத்தில் ஓர் அதிகாரியால் கூட இந்த குடும்பத்துக்கு உதவ முடியவில்லை என்பதை நம்பமுடியவில்லை. ஆம், இப்போது சில கந்து வட்டி வாங்குபவர்கள் கைது செய்யப்படுவார்கள். ஆனால் அந்த 4 உயிர்கள்?அரசாங்க அதிகாரிகளே, ஏழை மக்களின் நிலைக்கு தயவு செய்து இன்னும் பரிவு காட்டுங்கள். அவர்கள் கடைசி நம்பிக்கை நீங்கள் தான் என நம்புகிறார்கள். அவர்களுக்கு சேவை செய்ய தான் உங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்