நீண்ட இடைவெளிக்குப் பிறகு சோலோ ஹீரோவாக சுந்தர்.சி நடித்திருக்கும் ‘தலைநகரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தை VZ துரை இயக்கியுள்ளார்.
2006-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி நாயகனாக அறிமுகமான படம் 'தலைநகரம்'. சுராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் சுந்தர்.சியுடன் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வடிவேலுவின் ‘நாய் சேகர்’ கெட்டப் மற்றும் காமெடி பெரும் பிரபலமானது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘தலைநகரம் 2’ உருவாகியுள்ளது. ‘முகவரி’, ’தொட்டி ஜெயா’ ஆகிய படங்களை இயக்கிய VZ துரை இயக்கியுள்ளார். ரைட் ஐ சார்பாக எஸ்.எம். பிரபாகரன் இப்படத்தை தயாரித்துள்ளார். நேற்று (ஜூன்) சென்னையில் நடைபெற்ற விழாவில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: நீண்ட இடைவெளிக்குப் பிறகு சோலோ ஹீரோவாக நடித்திருக்கிறார் சுந்தர்.சி. முதல் பாகத்தில் சுந்தர்.சி ஏற்று நடித்த ‘ரைட்’ என்ற கதாபாத்திரத்தை சுற்றியே இப்படமும் இருக்கப் போகிறது என்பது ட்ரெயலரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ட்ரெய்லர் முழுக்கவே வன்முறையும், கவர்ச்சியும் சற்று தூக்கலாக இடம்பெற்றுள்ளது. தமிழ் கேங்ஸ்டர் படங்களுக்கே உரிய அரிவாள், கத்தி, அடிதடி, ஆள் கடத்தல், ரத்தம் தெறிக்கும் வயலன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் இதிலும் தவறாமல் இடம்பெற்றுள்ளன. படம் வெளியாகும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
» படப்பிடிப்புக்காக 14 மணிநேரம் தண்ணீருக்குள் நின்ற ரகுல் ப்ரீத் சிங்
» ஹீரோ இமேஜை உயர்த்தவே தமிழ் சினிமாவில் கதை எழுதப்படுகிறது - சொல்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன்
‘தலைநகரம் 2’ ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago