இந்தியன் 2 கதைக்கரு எப்போது உருவானது? - இயக்குநர் ஷங்கர் தகவல்

By செய்திப்பிரிவு

'இந்தியன் 2' கதைக்கரு எப்போது உருவானது என்று பிக் பாஸ் இறுதிப் போட்டி நிகழ்ச்சியின் போது இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். அவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நேற்று நடந்த நிகழ்வில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள 'இந்தியன் 2' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் ’தில்’ ராஜு கலந்து கொண்டார்.

'இந்தியன் 2' அறிவிப்பின் போது இயக்குநர் ஷங்கர் பேசியதாவது:

'இந்தியன்' 2- பாகம் உருவாக்கப் போகிறோம். ஒவ்வொரு படம் முடிவடையும் போதும், அதன் 2-ம் பாகம் எடுக்க வேண்டும் என யோசிப்பேன். ஆனால், கதை சரியாக அமையாது. 3 வருடங்களுக்கு முன்பாக ஒரு கதைக்கரு கிடைத்தது, அப்போது மற்ற படத்தின் பணியில் இருந்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு கதைக்கரு முழுமையாக சரிசெய்து, அதை இப்போது செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் வந்தது. '2.0' ஆரம்பிக்கும் போது கூட எனது அடுத்த படம் 'இந்தியன் 2' என்று உள்மனது சொல்லிக் கொண்டே இருந்தது. அது தற்போது நடப்பது ரொம்ப சந்தோஷம்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்