சென்னை: நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ வெப் தொடரில் விஜய் படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மிண்டி கலிங் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த 8ஆம் தேதி வெளியான தொடர் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ - சீசன் 4 (Never Have I Ever). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் ஒருவர் தனது பள்ளிப்பருவத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து இத்தொடர் பேசுகிறது. மைத்ரேயி ராமகிருஷ்ணன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்தொடர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.
இத்தொடரின் நான்காவது சீசனில் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே' பாடல் இடம்பெற்றுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதே தொடரில் மற்றொரு எபிசோடில் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘சாமி சாமி’ பாடலின் தமிழ் வடிவமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘நெவர் ஹேவ் ஐ எவர்’ தொடரில் நடித்திருக்கும் மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர்கள் இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago