தமிழக அரசின் புதிய கேளிக்கை வரி விதிப்பு தொடர்பாக இன்று தமிழ்த் திரைப்பட அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழிப்படங்களுக்கு 10 சதவீத கேளிக்கை வரியும், மற்ற மொழிப் படங்களுக்கு 20 சதவீத கேளிக்கை வரியும் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து சென்னையில் சில தனியார் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளின் காட்சிகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூடி இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றனர்.
இதுகுறித்து திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தலைவர் அபிராமி ராமநாதன் கூறியதாவது :
புதிய கேளிக்கை வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. ஐநாக்ஸ், பிவிஆர் ஆகிய மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகள் காட்சிகளை ரத்து செய்துள்ளன. இவை அகில இந்திய நிறுவன நிர்வாகம் என்பதால் அவர்களாகவே முடிவை எடுத்திருக்கிறார்கள்.
மற்ற திரையரங்குகளில் எப்போதும் போல காட்சிகள் திரையிடப்பட்டே வருகின்றன. அதே போல தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் காட்சி ரத்து என தகவல்கள் வெளிவருகின்றன. அதில் எந்த உண்மையும் இல்லை. அரசின் புதிய கேளிக்கை வரி விதிப்பு குறித்து இந்த அலோசனைக் கூட்டத்தில் பேசப்படும். இதில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக சபையின் நிலைப்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் சங்க செயற்குழு
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இதில் அதன் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொள் கின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago