நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வாழ்க்கை ஒரு ஆண்டை கடந்துள்ளது. திருமண நாளை முன்னிட்டு, விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த ஒரு வருடம்.... நிறைய தருணங்கள், நிறைய ஏற்ற தாழ்வுகள், எதிர்பாராத பின்னடைவுகள், சோதனைகள் நிறைந்திருந்தது.
ஆனால் அதீத அன்பும் பாசமும் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்க வருவது நம்பிக்கையை மீட்டு தருவதோடு, அது கனவுகள் மற்றும் இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க அனைத்து ஆற்றலையும் தருகிறது. என் உயிர் மற்றும் உலகங்களுடன் சேர்ந்து அனைத்தையும் ஒன்றாக வைத்திருக்கிறேன்.
குடும்பம் கொடுத்த பலம் எல்லாத்தையும் மாற்றுகிறது. சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர், அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க பாடுபடுவது தான் என்னை போன்றவர்களுக்கு தேவையான ஊக்கம்" என்று உருகியுள்ளார். இந்தப் பதிவுடன் நயன்தாரா மற்றும் தனது இரு மகன்கள் உயிர் மற்றும் உலக் இருக்கும் புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் திருமண விழா கொண்டாட்டத்தின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இவை தற்போது வைரலாகி வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago