ரஜினி - த.செ.ஞானவேல் படத்தில் 'பாலிவுட் பிக் பி' அமிதாப் பச்சன்?

By செய்திப்பிரிவு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து மற்றப் பணிகள் நடந்து வருகின்றன. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனால் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பும் ரஜினி இயக்குனர் த.செ.ஞானவேல் இணையும் படத்தின்மீது திரும்பியுள்ளது. ரஜினியின் 170வது படமாக தயாராகவிருக்கும் இதற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. எனினும் விக்ரம் தரப்பிலிருந்து நடிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

இப்போது, ரஜினிக்கு இணையான அந்த கேரக்டரில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட ரஜினி படத்தில் நடிக்க அமிதாப் பச்சன் பச்சை கொடி காட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ரஜினியின் அனுமதியுடன் மும்பை சென்று அமிதாப்பிடம் கதை சொல்லப்பட்ட நிலையில் அமிதாப் மகிழ்ச்சியுடன் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார் தமிழ் திரையுலக வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பேசப்படுகிறது.

ரஜினி - அமிதாப் இணைவது உறுதி ஆனால், இக்கூட்டணி கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1991-ம் ஆண்டு இந்தியில் வெளியான 'ஹும்' (HUM) படத்தில் ரஜினி, அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்திருந்தார். அதன்பிறகு இக்கூட்டணி இணையவேவில்லை. இதனால் படத்துக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்