நடிகர்களின் சம்பளம் தொடர்பாக தமிழிசை வெளியிட்ட ட்வீட்டிற்கு இயக்குநர் கார்த்திக் நரேன் பதிலடி கொடுத்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பாக தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அதில், "மெர்சல் அர்ப்பணிப்போடு வேலை செய்யும் மருத்துவர்களை கேலி பேசுகிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை ஊழல்வாதிகளாகக் காட்டுகிறது. மருத்துவர்கள் 5 ரூபாய் கட்டணம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதே வேளையில் நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவார்களா?" என்று பதிவிட்டார்.
இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு 'துருவங்கள் 16' இயக்குநர் கார்த்திக் நரேன், "தவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும். ஏன் சில அரசியல்வாதிகள் நடிகர்களை விட அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களே. அவர்களை கேட்கலாமே?" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago