மெர்சல் கருத்துகளை தேவைப்பட்டால் அகற்றத் தயார்: தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்

By ஸ்கிரீனன்

'மெர்சல்' படத்தில் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை தேவைப்பட்டால் அகற்றத் தயார் என்று 'மெர்சல்' திரைப்படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்நிலையில் 'மெர்சல்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

விஜய்  நடித்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் 100-வது படமான 'மெர்சல்' தீபாவளி அன்று வெளியாகி தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 'மெர்சல்' திரைப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் எங்கள் நிறுவனத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாபெரும் வெற்றிப் படைப்பான மெர்சலை உருவாக்க கடந்த ஓராண்டு காலம் அயராது பாடுபட்ட விஜய்க்கும், இயக்குநர் அட்லி மற்றும் ஒட்டுமொத்த 'மெர்சல்' படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே 'மெர்சல்' படம் குறித்த பல சர்ச்சைகள் எழுந்தன. அவைகளை சரி செய்து கடும் சிரங்களுக்கு நடுவே ரசிகர்களுக்கு உறுதியளித்தப்டி தீபாவளி அன்று திரைப்படத்தை வெளியிட்டோம். மெர்சலின் பின்னணியில் பல கோடி ரூபாய் முதலீடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஓராண்டு கால உழைப்பும் அடங்கியுள்ளது.

வெளியான சில தினங்களில் மீண்டும் சர்ச்சைகளுக்கு உள்ளானது எங்களை மிகுந்த மன வேதனையடைய செய்கிறது. 'மெர்சல்' திரைப்படம் யாருக்கும் எதிரானது அல்ல. அரசுக்கு எதிரான கருத்துக்களை சொல்லும் படமும் அல்ல. சாமானிய மனிதர்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்கிற ஒரு மருத்துவனின் கனவுதான் இந்த திரைப்படத்தின் கரு.

நல்ல பொழுதுபோக்கு சித்திரங்களை தந்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டுமே. இத்தனை ஆண்டு கால எங்களது நிறுவனத்தின் நோக்கம். எங்கள் தயாரிப்புகளால் யாரும் மன வருத்தமடைந்திருந்தால் அதை என்னுடைய சொத்த வருத்தமாகவே நான் கருதுகிறேன்.

சர்ச்சைகள் குறித்து பாஜகவின் மூத்த முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் எங்கள் படைப்பின் நோக்கம் குறித்தும், எங்கள் நிலை குறித்தும் இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் தயாரிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்தோம். அவர்களும் எங்கள் விளக்கத்தை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டனர்.

நாங்கள் சந்திக்கும் போது பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட அனைவரும் அவர்களை நேரில் சந்திக்க முடிவெடுத்த எங்கள் நேர்மையான அணுகுமுறையை பாராட்டினார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் பார்வையில் அவர்கள் எதிர்ப்பு நியாயமாகவே உள்ளது. எதைப்பற்றியும் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் அகற்றப்பட வேண்டுமென்றால் அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.

இந்த தீபாவளியை மெர்சல் தீபாவளியாக மாற்றிய உலகத் தமிழர்கள் அனைவருக்கும் குறிப்பாக விஜய்யின் ரசிகர்களுக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்