காலா ஜனவரி மாதம் வெளியாகாது: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

By செய்திப்பிரிவு

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'காலா' ஜனவரி மாதம் வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

'பேடுமேன்' வெளியீட்டு தேதி அறிவிப்பைத் தொடர்ந்து, '2.0' ஏப்ரல் வெளியீடு தள்ளிப் போகிறது என்று தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து விநியோக ஏரியாவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இதனால் தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி 'காலா' ஜனவரி வெளியீடாக வர வாய்ப்பிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மும்பையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த தகவல் குறித்து தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தனது ட்விட்டர் கணக்கில், "பல்வேறு செய்திகள் வெளியாகி இருப்பது போல், ஜனவரி மற்றும் பொங்கல் வெளியீட்டிற்கு 'காலா' தயாராகாது (Contrary to rumours and articles, #Kaala would not be ready for a January nor Pongal release)" என்று தெரிவித்திருக்கிறார்கள்.

நீண்ட நாட்களாக சென்னையில் நடைபெற்ற 'காலா' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவுற்றது. மும்பையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு முடிந்தால், ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும். ஆனால், '2.0' வெளியீட்டுக்கு பின்பே 'காலா' படத்தை விளம்பரப்படுத்தி வெளியிட தனுஷ் முடிவு செய்திருப்பது தெளிவாகியுள்ளது.

வுண்டர்பார் நிறுவன ட்வீட்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்