டொரன்டோ: நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்து ஐஸ்வர்யா ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார். ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பற்றி அறிந்ததுதான். இந்நிலையில் கனடாவின் டொரன்டோ நகரில் தினக்கூலி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு சமீபத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது ரஜினியின் ‘உழைப்பாளி’ படத்தில் இடம்பெற்றுள்ள, ‘உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்குமில்லை’ என்ற பாடலுக்கு அவர்கள் சாலையில் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago