'மெர்சல்' படத்தை இணையத்தில் பார்த்த சர்ச்சைத் தொடர்பாக எச்.ராஜாவுக்கு இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, "’மெர்சல்’ காட்சிகளை இணையத்தில் பார்த்தேன்" என்று பேசினார். இதனால், திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்தார்கள்.
எச்.ராஜாவின் பேச்சு குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கட்சிக்காரர்களின் நெரிசல் காரணமாக மெர்சல் காணவில்லை. முட்டி மோ(டி)தி பார்க்க வைத்துவிடுவார்களோ?. வெற்றிக்கு நன்றி சொல்ல டெல்லி விஜய்யம்!
மரியாதைக்குரிய எச்.ராஜாவுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும். அவர் களவாடி(யாய்) மெர்சல் கண்டிருந்தால்..! நான் எல்லோருக்கும் நண்பன்! ஆனால் சினிமாவை திருடி பிழைப்பவர்களுக்கும், அதில் கண்டு கழிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago