விஷால் அலுவலகத்தில் வருமான வரிச் சோதனை நடைபெற்றிருப்பது குறித்து குஷ்பு காட்டமாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் உள்நோக்கம் இருந்தால் அதைச் சந்திக்க தயாராக இருப்பதாகவும், நேர்மையாகத் தொழில் செய்வதால் எந்த பயமும் இல்லை என்றும் விஷால் தெரிவித்தார்.
மேலும், ‘மெர்சல்’ திரைப்படத்தை இணைய தளத்தில் பார்த்ததாகக் கூறிய பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் விஷால் தெரிவித்தார். விஷாலை மிரட்டுவதற்காகவே அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வருமான வரிச் சோதனை குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ரெய்டுகள்... பாஜகவிடமிருந்து இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இது உண்மையான துணிவு அல்ல. இது வெறும் முஷ்டி பலம் காட்டும் செயல். உண்மையை நாங்கள் உறுதிபட உரைப்பதிலிருந்து எங்களை எதுவும் கட்டுப்படுத்தாது.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
54 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago