தயாராகிறார் விக்ரம்... ஜூன் 17-ல் ‘தங்கலான்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 17-ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப்பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான்’. ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு இந்தப்ப டத்தை இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் ‘கேஜிஎஃப்’ பகுதிக்கான படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்ப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள விக்ரம் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார்.

அதன்படி, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இந்த மாதம் 17-ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ள நிலையில், ஜூலை முதல் வார இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்