என்னை அப்படியே ஞாபகம் வைத்திருந்தார்: ஷாருக்கானை புகழும் பிரியாமணி

By செய்திப்பிரிவு

சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, குல்ஷன் குரோவர், சானியா மல்ஹோத்ரா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். செப்.7ம் தேதி படம் வெளியாகிறது. ஷாருக்கான் நடித்து வெளியான ‘பதான்’ படம் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதால், ‘ஜவான்’ படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஷாருக்கானுடன் இரண்டாவது முறையாக நடிக்கும் பிரியாமணி கூறும்போது, “அவரின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். அவருடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. அவர் என்னை ஞாபகம் வைத்திருப்பாரா, மாட்டாரா என்ற யோசனையில் இருந்தேன். ஆனால், படப்பிடிப்பில் முதன்முதலாக என்னைப் பார்த்ததும் வழக்கம்போல கட்டியணைத்தார். ‘சென்னை எக்ஸ்பிரஸு’க்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி’என்றார். தினமும் நடிகர்கள், ரசிகர்கள் உட்பட ஏராளமானவர்களைச் சந்திக்கிறார் ஷாருக்கான். ஒரு படத்தில் ஒரு பாடலில் மட்டும் ஆடிய என்னையும் அவர் ஞாபகம் வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது” என்றார். ஜவான் படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்ற விவரத்தைச் சொல்ல மறுத்துவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

10 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்