மெர்சல் குறித்த வெங்கட்பிரபுவின் கருத்தால் சர்ச்சை

By ஸ்கிரீனன்

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'மெர்சல்' படம் குறித்து வெங்கட்பிரபுவின் கருத்தால் சமூகவலைதளத்தில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.

'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் தழுவல் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பல திரையுலக பிரபலங்களும் இப்படத்தைப் பாராட்டி தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். இதில் வெங்கட்பிரபு கூறியிருக்கும் கருத்து சர்ச்சையாகியுள்ளது.

'மெர்சல்' குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு, " மெர்சல் ஒரு விழாக்கால விருந்து. மிக அற்புதமாக அட்லியால் கையாளப்பட்டுள்ளது. பஞ்சு சாருக்கே எல்லாப் பெருமையும் சேர வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மறைந்த பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு பஞ்சு, "அவருக்கான (பஞ்சு அருணாச்சலத்துக்கான) பெருமையை யாரிடமும் வேண்டிப் பெறத் தேவையில்லை. மயங்குகிறாள் ஒரு மாது தான் திருட்டுப்பயலே என ரீமேக் ஆனது. ஆனால், அதில் எந்த கிரெடிட்டும் அவருக்கு அளிக்கப்படவில்லை. விட்டுத்தள்ளுங்கள். சாதனையாளர்கள் என்றும் சாதனையாளர்களே " என்று தெரிவித்திருக்கிறார்.

வெங்கட்பிரபுவின் கருத்துகளால் ட்விட்டர் பக்கத்தில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. அவரை விஜய் ரசிகர்கள் பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள். "தங்களுடைய படங்கள் எல்லாம் ஹாலிவுட் படத்தின் தழுவல் தானே" என்று பலரும் தெரிவித்துவருகிறார்கள்.

இவருடைய கருத்துகளால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே சமூகவலைத்தளத்தில் மீண்டும் வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்