சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் 'விக்ரம்'. கடந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் 400 கோடி வசூலை எட்டியது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கமலுக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படம் வெளியாகி தற்போது ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
ரசிகர்கள் பலரும் ட்விட்டர் தளத்தில் #1YearOfIndustryHitVikram, #1YearOfRolex உள்ளிட்ட பல ஹேஷ்டேகுகள் மூலம் ‘விக்ரம்’ படத்தை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். படத்தில் இடம்பெற்ற காட்சிகள், வசனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
’விக்ரம்’ படத்தை தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் இதனை கொண்டாடும் விதமாக பிரத்யேக போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளது.
» ஒடிசா ரயில் விபத்து | நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் இரங்கல்
» மேடையில் சேர்ந்து பாடிய ‘புயல்கள்’ - இணையத்தில் வைரலாகும் வீடியோ
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago