திருவனந்தபுரம்: ‘மெஜிஷியன்’ படம் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாள திரையுலகிற்கு திரும்பியுள்ளார் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி.
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடித்திருந்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இதையடுத்து, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி அடுத்ததாக ‘மெஜிஷியன்’ (Magician) என்ற மலையாள படத்துக்கு இசையமைக்கவுள்ளார். படத்தின் தொடக்க விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எம்.எம்.கீரவாணி, ‘‘மீண்டும் மலையாள சினிமாவுக்குள் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.
1996-ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதேவி நடிப்பில் உருவான ‘தேவராகம்’ (Devaraagaan) படத்துக்கு கீரவாணி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மெஜிஷியன்’ படம் மூலம் அவர் மீண்டும் மலையாள சினிமாவுக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
16 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago