டோவினோ தாமஸ் நடித்துள்ள வரலாற்றுப் படமான ‘அஜயந்தே ரண்டாம் மோஷனம்’ (Ajayante Randam Moshanam) படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
டோவினோ தாமஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘அஜயந்தே ரண்டாம் மோஷனம்’ (Ajayante Randaam Moshanam). பீரியட் ட்ராமாவாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்குகிறார். கேரளாவில் 1900, 1950 மற்றும் 1990 என வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் இப்படத்தின் கதையில் 3 கதாபாத்திரங்களில் டோவினோ தாமஸ் நடித்துள்ளார். கிருத்தி ஷெட்டி, பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, சிவாஜித் மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
டீசர் எப்படி? - ‘பாட்டி மணியனோட கதை சொல்றீங்களா?’ என சிறுமி கேட்க, ‘திருடனோட கதைய கேக்குற?’ என டோவினோ தாமஸுக்க இன்ட்ரோ கொடுக்கப்படுகிறது. அடுத்து மின்னல் வேகத்தில் கட்டாகும் ட்ரெய்லரில் விஷுவல் பிரமாண்டம் ஈர்க்கிறது. கலர்டோன், பின்னணி இசை, ஒளிப்பதிவில் கூட்டிருக்கும் அழகியல், ஆக்ரோஷமான டோவினோ தாமஸ் எல்லாம் ஒரு புள்ளியில் இணையும்போது மலையாள சினிமாவில் இப்படம் புதிய மைக்கல்லை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. டீசர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago