நடிகர் ஜெயராம் நடிக்கும் ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ (Abraham Ozler) மலையாள படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
‘ஆடு’, ‘ஆடு 2’, ‘அஞ்சாம் பதிரா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த முண்ணனி மலையாள இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ். இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ஜெயராம் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ என பெயரிடப்பட்டுள்ளது. மெடிக்கல் க்ரைம் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மிதுன் முகுந்தன் இசையமைக்கிறார். பெரிய பட்ஜெட்டில் படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மகள்’ (Makal) படத்தில் நடித்திருந்தார் ஜெயராம். அதன்பிறகு 2 வருடங்களாக மலையாளத்தில் அவர் படம் எதுவும் வெளியாகவில்லை. அண்மையில் தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் ஜெயராம் கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டரை ஷேர் செய்துள்ள கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நம்பி சார் கெட்டப் சூப்பர்” என கேப்ஷனிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago