காதலியை கரம் பிடிக்கிறார் நடிகர் சர்வானந்த் - ஜூன் 3ல் ஜெய்ப்பூரில் திருமணம்

By செய்திப்பிரிவு

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான சர்வானந்த், தமிழில், ‘எங்கேயும் எப்போதும்’, ‘கணம்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். தற்போது 38 வயதாகும் சர்வானந்த் அவரது காதலியை கரம்பிடிக்க இருக்கிறார். இவர்களின் திருமணம் ஜூன் 3ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் தான் இவர்களின் நிச்சயத்தார்த்தம் நடந்தது. இந்தநிலையில் திருமண அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணை தான் சர்வானந்த் திருமணம் செய்கிறார். அவர்கள் காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர் அனுமதி உடன் திருமணம் நடக்கவிருக்கிறது.

சர்வானந்த் 2004ம் ஆண்டு இடவா தரீக்கு படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சரியாக ஓடவில்லை. அதன்பிறகு, கௌரி, சிரஞ்சீவியின் ஷங்கர் தாதா எம்பிபிஎஸ் மற்றும் சங்கராந்தி போன்ற படங்களில் துணை நடிகராக நடித்தார்.

2010ம் ஆண்டு வெளியான பிரஸ்தானம் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இதன்பின்னர் ஸ்ரீகரம், மகாசமுத்திரம் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கத் நடித்த சர்வானந்த், கம்யம், பிரஸ்தானம், ரன் ராஜா ரன் மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய படங்களின் வெற்றி காரணமாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

14 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்