“மனித உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, மொழி வேறுபாடின்றி அவை எல்லோரையும் இணைக்க கூடியவை” என ‘2018’ மலையாள படம் குறித்து இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் தெரிவித்துள்ளார்.
டோவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘2018’ மலையாள திரைப்படம் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது. இப்படத்தின் ஜூட் அந்தனி ஜோசப் ‘2018’ படம் குறித்து அளித்த பேட்டி ஒன்றில், “இந்தப் படத்தை இயக்குவது மிகவும் கடிமான இருந்தது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எனது முழு நேரமும் சக்தியும் இந்தப் படத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. நான் ஒன்றும் சிறப்பான இயக்குநர் கிடையாது; அதே சமயம் இதற்கு முன்னால் பெரிய படங்களை இயக்கியது இல்லை.
ஆனால், கடுமையான உழைப்பின் மூலம் எல்லோராலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை இப்படத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன். தயாரிப்பாளரிடம் இந்தப் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியிட கோரினேன். இந்தப் படம் அந்த மக்களெல்லாம் கனெக்ட் ஆகுமா எனென்றால் மற்ற மொழிகளில் வெளியிட அதிக செலவாகும் என்றார். ‘இது ஒரு இயற்கை பேரிடர் நிகழ்வு. அதனால் உலகிலுள்ள அனைவருக்கும் இப்படம் கனெக்ட் ஆகும்’ என்றேன்.
மும்பையில் படத்தை பார்த்தபோது உணர்ச்சிப்பொங்க அந்த பார்வையாளர்கள் கைதட்டிப் பார்த்தனர். மனித உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, மொழி வேறுபாடின்றி அவை எல்லோரையும் இணைக்க கூடியவை. கேரள வெள்ளத்தின்போது எனது வீடு முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்தேன். கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். அந்தச் சம்பவம் தான் படமெடுக்க தூண்டியது” என்றார். | வாசிக்க > 2018 (Everyone is a Hero) திரைப் பார்வை: பேரிடரில் துளிர்க்கும் பேரன்பும், அட்டகாசமான திரை அனுபவமும்!
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago