சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’, ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படப்பிடிப்புக்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த அவர், கடந்த மாதம் நாடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 23ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் அட்டகாசமான க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், இன்று முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
‘கேம் சேஞ்சர்’ படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் வெளியாகிறது. எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
» ‘ஸ்டைல் வேணுமா, ஆக்சன் வேணுமா.. எல்லாம் உந்தி’ - தில் ராஜூ பாணியில் கவனம் ஈர்த்த வெங்கட் பிரபு
» The Kerala Story | ‘கதை என்னுடையது; எனக்கு நன்றி கூட இல்லை’ - மலையாள திரைக்கதை ஆசிரியர் ஆதங்கம்
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago