விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஷிவ நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் திரைப்படம் ‘குஷி’. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படம் பான் இந்தியா முறையில் வெளியாகிறது.
இந்நிலையில், ‘குஷி’ படத்தின் முதல் சிங்கிளான ‘என் ரோஜா நீயே’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் இந்தி மற்றும் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ‘லைகர்’ படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘குஷி’ படத்தை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ படத்திற்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
» கிராஃபிக்ஸில் முன்னேற்றம் - பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ ட்ரெய்லர் எப்படி?
» உதவி இயக்குநர் மீது வழக்கு: முதல்வரை டேக் செய்து பா.ரஞ்சித் ட்வீட்
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
16 mins ago
சினிமா
24 mins ago
சினிமா
56 mins ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago